The Big Bad Wolf : Online Book Sale
The Big Bad Wolf Online Book Sale In Sri Lanka Till October 04, 2020.
Click Below to Online Book Sale
Online Book Sale : The Big Bad Wolf
Applications are invited for the following post in SLIATE. The detailed Bio Data of applicants with copies of certificates must reach to the Director General, SLIATE, “Janawathu Piyasa”, No.320, T. B. Jayah Mawatha, Colombo 10 under registered post
Closing Date 2020.11.03
01.Accountant- (Sammanthurai and Anuradhapura Advanced Technological Institutes) –Vacancies- 02
02. Librarian – (Ampara, Jaffna and Anuradhapura Advanced Technological Institutes) –Vacancies- 03
Nenasa Television, a Public-Private-Partnership with the Ministry of Education is an initiative to bring high-quality educational content to students across the island. While the Ministry of Education is the key stakeholder bringing to the initiative its teaching standards and resources, Dialog solely bears the cost of making Direct to Home (DTH) satellite television channels over which the specially produced content is broadcast island wide – including over 2,000 specially equipped schools and Dialog’s over one million home subscribers.
In prioritizing content for broadcast, it was decided early on in the project to focus a greater extent on grade 10 and 11 students preparing for the General Certificate of Education (G.C.E.) Ordinary Level (O/L) examination. These students are able to watch the broadcast via the two dedicated TV channels Nenasa 10 and Nenasa 11.
Use Nenasa Lab in Schools or Use the Dialog TV in Home
Click Below for the time table
Grade 10
Grade 11
Exam Department
Cabinet Decisions
28 Sep 2020
කැබිනට් තීරණ
அமைச்சரவை முடிவுகள்
Sinhala ant tamil both are attahced.
28.09.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
01. பொலன்னறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரதன்மையற்ற நிலையினால் அதிக ஆபத்தை கொண்டதான பகுதி தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ள இடங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
02. தீகவாபி தாது கோபுரத்தை புனரமைத்து பாதுகாத்தல்
05. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்பாக அரிசி கையிருப்பை நடைமுறைப்படுத்துவதற்கான மூலதன தேவை
06. அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றுதல்
07. 2020/ 2021 பெரும்போகத்திற்கு தேவையான சுற்றாடலுக்கு பொருத்தமான உர நிவாரணத்தை வழங்கும் முன்னோடித் திட்டம்
08. (Anti-Personnel Mines) நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுத்தல்.
09. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தை மேற்கொள்ளுதல்
10. நீதி நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்காக விஷேட அலகொன்றை நீதி அமைச்சின் கீழ் ஸ்தாபித்தல்.
11. பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் - 2021
12. மகாவலி நீரை பாதுகாத்து முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகையை வழங்குதல்.
13. எட்டு மாத காலத்திற்கான டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்.
14. ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) நிதி உதவியின் கீழ் மேல் மாகாண வலையத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் (Light rail) கட்டமைப்பு திட்டம்.
15. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்
முடிவுகள் விளக்கமாக...
01. பொலன்னறுவை மாவட்டத்தில் புவியியல் ஸ்திரதன்மையற்ற நிலையினால் அதிக ஆபத்தை கொண்டதான பகுதி தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ள இடங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொலன்னறுவை பகுதியில் புவியியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஹிங்குராங்கொடை செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 06 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 223 வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இந்த வீடுகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகள் மத்தியில் மிகவும் பாரதூரமாக பாதிக்கபட்டுள்ள 67 வீடுகள் குடியிருப்பதற்கு பொருத்தமானது அல்ல என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இவ்வாறான வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களை பொருத்தமான இடங்களில் குடியமர்த்த வேண்டியுள்ளது.
இதற்கு முன்னர் மண்சரிவு அனர்த்தம் அதிகம் உள்ள வலயங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்காக நிலையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடைமுறைக்கு 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைவாக இந்த குடும்பங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் மற்றும் உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற் கொண்டு கீழ் கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• இந்த அதிக அனர்த்தத்தை கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தல்.
• இவ்வாறு குடியமர்த்தப்படும் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 10,000.00 ரூபா ஆகக்கூடிய தொகைக்கு உட்பட்டதாக ஆறு மாதகாலம் வரையில் வீட்டு வாடகை வழங்குதல்.
• நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தேவையான அடிப்படை வசதிகளுடனான வீடமைப்பு திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தி வெளியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்காக இந்த உத்தேச வீடமைப்பு திட்டத்தில் வீடுகளை வழங்குதல்.
• குறுகிய காலப்பகுதிக்குள் உத்தேச வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்படுமாயின் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மண்சரிவு அனர்த்த நிலை அதிகம் உள்ளதன் காரணமாக குடியிருக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கீழ் கண்ட நிவாரணங்கள் ஹிங்குராங்கொட பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்த நிலையின் காரணமாக குடியிருக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்காக வழங்குதல்.
I. காணியுடன் வீடொன்றை கொள்வனவு செய்வதற்கு 1.6 மில்லியன் ரூபாவை வழங்குதல்.
II. காணி ஒன்றை கொள்வனவு செய்து வீடை நிர்மாணிப்பதற்கான காணிக்காக 0.4 மில்லியன் ரூபாவும், வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாவையும் வழங்குதல்.
III. அரசாங்கத்தினால் காணி வழங்கப்பட்டிருக்குமாயின் அந்த காணியில் வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.2 மில்லியன் ரூபாவை வழங்குதல்.
02. தீகவாபி தாது கோபுரத்தை புனரமைத்து பாதுகாத்தல்
கிழக்கு மாகாணத்திற்குள் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி செயலக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாகாணத்தில் முக்கிய கோபுரம் என்ற ரீதியில் கருதப்படும் தீகவாபி தாது கோபுரத்தை துரிதமாக புனரமைத்து பாதுகாப்பதற்காக நிதியம் ஒன்றை அமைப்பதற்கு இந்த பணிக் குழுவினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தீகவாபி தாது கோபுரத்தை துரிதமாக புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான தேவையை நிறைவேற்றுவதற்கு நிதியை திரட்டுவதற்காக பொறுப்பு நிதியம் ஒன்று அமைக்கப்பட்டதற்கும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ண அவர்களை தலைவராக கொண்ட அரச மற்றும் தனியார் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்ட உப குழு ஒன்று அதற்காக அமைக்கப்பட்ட உதவிக்குழு ஒன்றின் மூலம் ஜனாதிபதி செயலக பணிக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இந்த புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. கிரிந்தி ஓயா நீர் விநியோக உத்தேச நடைமுறையில் பழமை வாய்ந்த நீர் நிரப்பும் இயந்திரத்தில் துரித மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்தல்
கிரிந்தி ஓயா நீர் விநியோக உத்தேச நடைமுறையில் பழமை வாய்ந்த நீர் நிரப்பும் இயந்திரத்தில் துரித மேம்படுத்தும் வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் அப்பொழுது வீடமைப்பு விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இந்த திட்டத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்தோடு இது வரையில் மொத்த முன்னேற்றத்தில் 40 சதவீதமாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிர்மாணப்பணிகளுக்காக பழமை வாய்ந்த சுத்திகரிப்பின் தற்போதைய வலு 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக பிரதேச மக்களுக்கு போதுமான வகையில் நீர் வழங்குவதற்கு முடியாதுள்ளது. இதனால் இந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக இந்த திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யும் எதிர்ப்பார்ப்புடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையிடம் ஒப்படைப்பதற்கும், அதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் ஒன்றிணைந்து (இணை தலைமைத்துவம் ரீதியில்) பிரித்தானியாவின் Royal Veterinary Collage உடன் ஒன்றிணைந்துOne Health Poultry Hub திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்.
பிரித்தானியா Royal Veterinary collage உடன் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் ஒன்றிணைந்து (இணை பங்குபற்றுதலுடன்) பிரித்தானியாவின் உலகளாவிய சவாலுக்கான ஆய்வு நிதியத்தின் பங்களிப்புடன் One Health Poultry Hub என்ற ரீதியில் ஆய்வு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உள்ளூர் கோழி வளர்ப்பு தொழில்துறையை ஏற்றுமதி துறையில் முன்னெடுப்பதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு தொழில்நுட்பம் மற்றும் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தி பணிகளை சரியான வகையில் முன்னெடுப்பதற்கும், இந்த ஆய்வு திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரித்தானியாவின் உலகளாவிய சவால்களுக்கான ஆய்வு நிதியத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு ஐந்து வருட காலத்திற்காக 700,000 பிரித்தானிய பவுன்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் அதன் ஆய்வு திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்பாக அரிசி கையிருப்பை நடைமுறைப்படுத்துவதற்கான மூலதன தேவை
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் அரிசி தயாரிப்பு இடம்பெறாது என்பதினால், இந்த காலப்பகுதிக்கு தேவையான அரிசி வருடத்தின் ஏனைய காலப்பகுதியில் தயாரிக்கப்படும் அரிசியில் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கையிருப்பு தொகை அரிசியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாத (04) காலப்பகுதிக்கான அரிசி தேவை சுமார் 3 சதவீதமாகும். அதாவது, சுமார் 25,000 மெற்றிக் தொன் பாதுகாப்பு கையிருப்பு தொகையாக முன்னெடுப்பதற்காக களஞ்சியப்படுத்தும் செலவுடன் 2,241 மில்லியன் ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காக அந்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் பணி மூலதன கடன் தொகையில் நான்கு (04) மாத காலத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் திறைசேரியின் பிணை ஆவணத்தை வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றுதல்
அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அச்சகர் என்ற ரீதியில் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அச்சு பணிகளில் குறிப்பிடத்தக்க அளவை மேற்கொள்வதற்கு அரச அச்சக திணைக்களத்திற்கு ஆற்றல் உண்டு. இருப்பினும் நிறுவனங்களின் மூலம் தமது அச்சு பணிகளுக்காக வருடாந்தம் பாரிய தொகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு, வெகுஜன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சுக்குட்பட்ட அச்சு நிறுவனங்கள் நடத்தப்படாத அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அச்சு தேவைகளின் பெறுமதியை சுமார் 25 சதவீதம் குறையாத வகையில் அதன் அச்சு பணிகளை அரச அச்சக திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
07. 2020/ 2021 பெரும்போகத்திற்கு தேவையான சுற்றாடலுக்கு பொருத்தமான உர நிவாரணத்தை வழங்கும் முன்னோடித் திட்டம்
இரசாயன உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு சிறுபோகம் தொடக்கம் சேதன பசளை உரத்தை வழங்கும் முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா மானியத்தை ஒதுக்குவதற்காக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, 14 மாவட்டங்களில் சுமார் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் கொம்போஸ்ட் சேதன திரவ பசளை மற்றும் Bio-fertilizer - உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் இரசாயன உர பாவனையை 30 வீதம் தொடக்கம் 50 வீதம் வரையில் குறைத்துக்கொள்ள முடியும். இந்த மாதிரி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கரில் பெறப்படும் உற்பத்தியை கவனத்தில் கொண்டு 2020 / 2021 பெரும்போகத்தில் 48,000 ஹெக்டயருக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. (Anti-Personnel Mines) நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுத்தல்.
(Anti-personnel Mines) நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தல் மொத்தமாக சேகரித்தல், மற்றும் பரிமாறுதலை தடை செய்தல் மற்றும் அவற்றை அழிப்பது தொடர்பான இணக்கப்பாடு இலங்கையினால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டில் 9 ஆவது சரத்தின் விதிகளுக்கு அமைவாக செயற்பாடுகளை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல், தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பொருத்தமான உடனடி, நிர்வாக மற்றும் ஏனைய செயற்பாடுகளை உள்ளடக்கிய இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் யாப்பை தயாரிப்பது இலங்கையினால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கமைவாக தற்பொழுது சட்ட மூல வரைவு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதானிப்புகளை உள்ளடக்கி அதன் திருத்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக சட்ட திருத்த வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தை மேற்கொள்ளுதல்
நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து செல்லும் பொழுது சமீப காலத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத மற்றும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில் விளக்க மறியல் சிறைச்சாலைக்கு உட்படுத்துவதற்கு அமைவாக உத்தரவை நீடிப்பதற்கான சந்தேக நபர்கள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜராவதற்கான தேவையை நீக்குவதற்கு நீதவானுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்றத்தின் அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதினால் அதற்கான அனுமதியை பெற முடியாமல் போனது.
Covid - 19 தொற்று நிலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இணையத்தள (Audio Visual Media) காணொளி ஊடக தொடர்பை பயன்படுத்தி கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வசதிகளை செய்வதற்கும், ஏனைய வழக்கில் நீதி மன்றத்தின் உத்தரவின் கீழ் தற்பொழுது புனர்வாழ்வளிக்கபட்டு வருவோருக்கும், சந்தேக நபர்களுக்கு இவ்வாறான வசதிகளை செய்து கொடுக்கக்கூடிய வகையில் 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கும், அதற்கமைவாக யாப்பு திருத்த சட்டமூலத்திற்கான சட்ட திருத்தமூல வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. நீதி நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவதற்காக விஷேட அலகொன்றை நீதி அமைச்சின் கீழ் ஸ்தாபித்தல்.
இலங்கையில் நீதி மன்ற செயற்பாடுகளில் இடம்பெறும் தாமதத்தில் தலையிடும் நபர்களை போன்று நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய அழுத்தம் இடம் பெறுவது தெளிவான விடயமாகும். 2016 ஆம் ஆண்டில் தேசிய சட்ட மதிப்பீட்டு குழுவினால் வழக்குகளின் தாமதிப்பதற்கான பல்வேறு பிரச்சினைகள், அதன் காரணமாக இடம்பெறும் தவறான பெறுபேறு மற்றும் இதற்கான உத்தேச தீர்மானம் குறித்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு இறுதியில் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பூர்த்தி செய்யப்படாத 7,66,784 வழக்குகள் இருப்பதுடன், இந்த நிலைமைக்கு துரிதமான தீர்வை காண்பது அவசியமாகும். வழக்கு தாமதத்திற்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடிப்படை வசதி அபிவிருத்தி, சட்ட மறுசீரமைப்பு, நீதிமன்ற தன்னியக்க செயற்பாடு மற்றும் வலு அபிவிருத்தி போன்ற விடயங்கள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நீதியமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற்கொண்டு சட்டத்துறை நிபுணர்களின் பங்களிப்பை பெற்று மூன்று வருட காலத்திற்குள் நீதிமன்ற மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கீழ் விஷேட அலகொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11. பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் - 2021
பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி தயாரிப்பாளர்களின் மூலம் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு உள்ளூர் துணி தயாரிப்பாளர்கள் மாத்திரம் விலை விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த தயாரிப்பாளர்களினால் மொத்த துணி தேவையில் சுமார் 40 சதவீதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இத்துறை பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி அளவில் அனைத்து பாடசாலைகளின் சீருடைக்கான துணி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த தயாரிப்பாளர்களுக்கு ஆற்றல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை சீருடை துணியை வழங்குவதற்கு அமைவாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்களை கவனத்திற் கொண்டு தேவையான மொத்த சீருடைக்கான துணியை உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் கொள்வனவு செய்வதற்கும் இதற்கமைவாக வவுச்சருக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான துணியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. மகாவலி நீரை பாதுகாத்து முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகையை வழங்குதல்.
மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தை நிர்மாணித்தல் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான செயலாக்க ஆய்விற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் ஒப்பந்தத்தில் 17 பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன், இதில் ஒப்பந்தத்தின் 10 பொதிகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வடமத்திய பாரிய கால்வாய் மற்றும் வடமேல் பாரிய கால்வாய்களை நிர்மாணிப்பதற்கான பெறுகைக்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ் குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• மஹகித்துல நுழைவாயில் சுரங்கம், மஹகித்துல மற்றும் மஹகிருல களஞ்சிய நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தல் மற்றும் மஹகித்துல நீர்த்தேக்கத்தில் இருந்து மஹகிருல நீர்த்தேக்கம் வரையில் கால்வாயை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்திற்கான கேள்வி மனுவை சமர்ப்பித்துள்ள China CAMC Engineering Co.Ltd என்ற நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டின் மூலம் உடன்பட்ட விலைக்கு அமைவாக இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
• வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டம் வரையில் நீர்ப்பாசன மற்றும் குடிநீரை வழங்குவதற்;காக நிர்மாணிக்கப்படும் 95.86 கிலோ மீற்றர் நீளம் வட மத்திய பாரிய கால்வாயை நிர்மாணிக்கும் திட்டத்தில் மின்னேரிய, கிரிதல, உறுலு பாதுகாப்பு வனம் ஊடாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 28 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப்பாதையின் ஒப்பந்தத்திற்கான கேள்வி மனுவை சமர்ப்பித்துள்ள China State Construction Engineering Corporation Ltd உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
13. எட்டு மாத காலத்திற்கான டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய 2020.10.15 தொடக்கம் 2021.06.14 வரையிலான எட்டு மாத காலத்திற்கு கீழ் கண்ட வகையில் டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால பெறுகையை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• ஆக கூடிய 0.05 சல்பரைக் கொண்ட 1,365,000 டீசல் பீப்பாய்கள் மற்றும் 0.001 ஆக கூடிய சல்பரை கொண்ட 315,000 டீசல் பீப்பாய்களுக்கான பெறுகையை M/s Emirates National Oil Company, Singapore (ENOC) என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
• 0.05 ஆகக் கூடிய சல்பரை கொண்ட 1,120,000 டீசல் பீப்பாய்களுக்கான பெறுகையைM/s Emirates National Oil Company, Singapore (ENOC) என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.
14. ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) நிதி உதவியின் கீழ் மேல் மாகாண வலையத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் (Light rail) கட்டமைப்பு திட்டம்.
ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் (JICA) கீழ் இலங்கையின் மேல் மாகாணத்திற்குள் இலகு ரயில் கட்டமைப்பு (LRT) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கீழ் கண்ட காரணங்களின் அடிப்படையில் இந்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ள பயன்களை அடைய முடியாது என்று அவதானிக்கப்பட்டுள்ளது.
• திட்டத்தில் ஆரம்ப திட்டத்திற்கு அமைவாக தனியார் மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தில் தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காக வருவோருக்கு மாற்று போக்குவரத்து வழி என்ற ரீதியில் நிலத்தில் ரயில் பாதையினூடாக செல்லக் கூடிய வசதிகளை கொண்ட இலகு ரயில் சேவை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
• இருப்பினும் இந்த திட்டத்தை மாற்றி பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படக்கூடிய கோபுரத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதை ஊடாக உத்தேச இலகு ரயில் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைக்கு பின்னர் முன்னைய அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வீடு மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பெருந்தொகையான கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும், கோபுரத்தின் மீது ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான ஆகக்கூடிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது
• தமது தனியார் மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தில் தொழில் மற்றும் ஏனைய பணிகளுக்காக வரும் நபர்களை கவரக்கூடிய மாற்று போக்குவரத்து வழியாக உத்தேச இலகு ரயில் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேச ரயில் மூலம் தேவையான வசதிகளை வழங்கக்கூடிய ஆற்றல் இல்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
•இதே போன்று உத்தேச இலகு ரயில் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தினால் அதற்காக பாரிய தொகையை செலவு செய்ய வேண்டி ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, இது வரையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள விடையதான அமைச்சர் என்ற ரீதியில் போக்குவரத்து அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடையங்களை கவனத்திற் கொண்டு மேல் மாகாண வலயத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட இலகு ரயில் கட்டமைப்பு (LRT) திட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
15. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்;களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்
Media Release (28 Sep 2020)
Grade V Scholarship
Exam 2020
Exam Department
මාධ්ය නිවේදනය
5 ශ්රේණියේ ශිෂ්යත්ව විභාගය 2020
தரம் 5 பரீட்சை தொடர்பான பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிக்கை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்
பரீட்சை நடைபெறும் திகதி 11 ஒக்டோபர் 2020
பகுதி 1 மு.ப. 0930 - 1030
பகுதி 2 1100 - 1215
மேற்படி பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இம்முறை விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதன்முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. guruwaraya.lk
இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. guruwaraya.lk இவ்வருடத்திலிருந்து அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு (Code) குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் கல்வி தகவல்கள் உட்சேர்க்கப்படும் போது இந்த குறியீடு (Code) முக்கியத்துவம் பெறும். எனவே பெற்றோர் அக்குறியீடு உள்ள பகுதியை வேறாக எடுத்து அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.guruwaraya.lk
இப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து விண்ணப்பதாரிகளினதும் பரீட்சை அனுமதி அட்டை மற்றும் வரவு ஆவணம் என்பன உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. guruwaraya.lk அனுமதி அட்டவணை மற்றும் வரவு ஆவணம் கிடைக்காத பாடசாலை அதிபர்கள் பரீீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது கொண்டு வருவது கட்டாயம் அல்ல. ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம் வழங்கப்படும் வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்
guruwaraya.lk