Exam & Exam Duty in Curfew Areas
ඇඳිරි
නීතිය පනවා ඇති ප්රදේශවල විභාග හා විභාග රාජකාරි
ஊரடங்கு
பிறப்பிக்கபட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை மற்றும் பரீட்சை கடமைகள்
ஊடக அறிவித்தல் 2020.10.21
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடைபெறுதல் மற்றும் பரீட்சை கடமைகள் தொடர்பாக
நாட்டில் கோவிட் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் , 2020 உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக அரச சேவையில் ஈடுபடும் பரீட்சை மற்றும் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு தமது தேசிய அடையாள அட்டை மற்றும் பரீட்சை கடமை நியமன கடிதம் அல்லது பரீட்சை திணைக்கள சேவை அடையாள அட்டை அல்லது பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை கடமை தொடர்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி என்பவற்றை முன்வைத்து தமது கடமைகளுக்கு செல்ல அனுமதி வழங்க இலங்கை பொலிசாரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் விண்ணப்பதாரிகள். பரீட்சை கடமைக்காக செல்லும் ஊழியர்கள் செல்வதறற்காக இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து விசேட போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி பிரதேசங்களில் வாழும் உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சென்று வர பரீட்சை அனுமதி அட்டையின் ஈ பகுதி மற்றும் தமது தேசிய அடையாள அட்டை என்பவற்றை முன்வைக்கலாம் எனவும் அறிவித்தல் வழங்கப்படுகின்றது.