Breaking

Search This Blog

14/11/2019

Short Story : A student who whistles to the professor

Short Story : A student who whistles to the professor


This story from facebook and could not find the owner.
Source : Facebook.
we have got it from Here

Here the story is (in Sinhala and tamil Both Languages)
කැම්පස් එකක ලෙක්චර් එකක් කරගෙන යද්දි එකපාරටම විසිල් ගහන සද්දයක් ඇහිලා මහචාර්යවරයා බෝඩ් එකේ ලියන එක නවත්තලා ඇහුවා " කව්ද විසිල් ගැහුවේ පන්තියේ කියලා" කවුරුවත් පාවලා දුන්නේ නෑලු විසිල් ගහපු එකාව.(කැම්පස් වල පාවලා දෙන්නේ නෑ) 

සර් ඊට පස්සේ පාඩම නවත්තලා මාර්කර් පෙන් එක සාක්කුවේ දාගෙන අදට ලෙක්චර් එක ඉවරයි මන් පොඩි කතාවක් කියන්නම් ඔයාලට කියලා කතාවක් කියන්න පටන් ගත්තලු.ලමයි ඔක්කම ආසාවෙන් අහන් හිටියලු 

ලමයි ඊයේ මම රෑ නිදාගන්න හදද්දි මට නිකන් තේරුනා නිදිමත අහලකවත් නෑ කියලා ..ඉතින් මන් කල්පනා කරා උදේ පෙට්‍රල් ගහන්න පෝලිම නිසා දැන් සෙනග අඩු නිසා පෙට්‍රල් ටිකක් ගහන් එන්න.ඉතින් මන් පෙට්‍රල් ගහලා ඉවර වෙලා පාරේ වාහන නැති නිසා ෆ්‍රී එකේ පොඩ්ඩක් කාර් එක පැදන් ආවා.එතකොට මන් දැක්කා ලස්සන ගෑනු ලමයෙක් පාර්ටි එකක් ඉවර වෙලා වාහනයක් එනකන් බලන් ඉන්නවා වගේ. මන් එයාගේ ලගට ගිහින් ඇහුවා ලිෆ්ට් එකක් ඕනිද කියලා.එයත් පුලුවන් නම් ලොකු දෙයක්..කියලා කාර් එකට නැග්ගා..මන් යන ගමන් එක එක මාතෘකා ගැන කතා කරත් එයා හොද පාලනේකින් කතා කරපු නිසා මට තේරුනා හොද බුද්ධිමත් කෙල්ලෙක් කියලා.මන් ඊට පස්සේ එයාව දාලා එන්න හදද්දි එයා මට ගෙට කතා කරා.මාත් ගියා..තේකක් එහෙම බීලා මන් කතා කරද්දි කියනවා ඔයා වගේ වැදගත් මිනිස්සු හරි අඩුයි.මන් ඔයාට කැමති කියලා..ඊට පස්සේ මන් කිව්වා ඔයත් හරි බුද්ධිමත් ඒක නිසා මාත් ඔයාට කැමතී කියලා.මන් ඇහුවා ඔය ඇයි කැම්පස් නොගියේ මෙච්චර හොද මොලයක් තිබිලත් කියලා.එතකොට එයා කිව්වා මට නම් ප්‍රස්න නිසා බැරි උනා ඒත් මගේ මල්ලි නම් කැම්පස් කියලා.මන් ඇහුවා මොන කැම්පස් එකේද කියලා.මාර වැඩේ කියන්නේ අපේ කැම්පස් එකේමයි.මන් ඇහුවා කොහමද එයාව අදුරගන්නේ කියලා.මොකද නම් වලින් කිව්වට ලමයි ගොඩක් ඉන්න නිසා.. 

එයා මට කිව්වා මල්ලි නිතරම විසිල් ගහනවා.ඒක නිසා ඕනි කෙනෙක්ට එයාව ලේසියෙන් අදුරගන්න පුලුවන්....මුලු පන්තියේම ලමයි ඔක්කම එකපාර විසිල් එක ගහපු කොල්ලා දිහාවට හැරුනා.. 

මහචාර්යවරයා ;- තෝ හිතුවද මන් මහචාර්යකම අනිත් අය වගේ ගත්තා කියලා.බැහැපන් පන්තියෙන් එලියට කියලා ආයිත් පාඩම පටන් ගත්තලු

பல்கலைக்கழகத்தில் வழமை போன்று விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, விசில் அடிக்கும் சத்தம் கேட்டு, வெண்பலகையில் தான் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்திய பேராசிரியர், விசில் அடித்தது யார் என வினவ யாரும் அம்மாணவனை காட்டிக்கொடுக்கவில்லை.


பேராசிரியர் உடனே கற்பிப்பதை நிறுத்திவிட்டு, விரிவுரை முடிந்துவிட்டது எனக் கூறி, நான்; ஒரு சிறு கதை ஒன்றை கூறுகின்றேன் என கூற மாணவர்களும் ஆசையுடன் அந்த கதையை கேட்கத் தொடங்கினர்.

பிள்ளைகளே நான் நேற்றிரவு தூங்கும் போது, எனக்கு தூக்கம் சிறிதேனும் வரவில்லை. தூக்கம் வராத காரணத்தினால், காலையில் பெட்ரோல் அடிக்க வரிசையில் நிற்பதை விட, இப்போது சென்றால், யாரும் இருக்க மாட்டார்கள், உடனே அடித்துவிட்டு வரலாம் என எண்ணி, பெட்ரோல் அடிக்கச் சென்றேன்.

பெட்ரோல் அடித்துவிட்டு வரும் வழியில், பாதையோரத்தில் அழகான இளம் பெண்ணொருத்தி பார்ட்டி ஒன்றில் கலந்து விட்டு வாகனம் ஒன்றிற்காகக் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. நான்; அவளருகில் சென்று, லிப்ட் வேணுமா என்று கேட்டேன். 

அவளும் பெரும் உதவி எனக் கூறிக் கொண்டு காரினுள் ஏறினாள். பல தலையங்களில் நான் அவளுடன் கதைத்துக் கொண்டு வந்தேன். அவளது பதில்கள் மூலம் அவள் சிறந்த அறிவாளி என்பதை புரிந்து கொண்டேன். அவளை அவளின் வீட்டில் இறக்கி விட்டு திரும்பும் போது, அவள் வீட்டிற்கு அழைத்தாள். தேநீர் தயாரித்து தந்தாள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் தற்காலத்தில் குறைவு, எனக்கு உங்களைப் பிடிக்கும் என்று. நீயும் கெட்டிக்காரி, அதனால் எனக்கும் உன்னை பிடிக்கும் என்றேன் நான்.

பின்னர் நான் இவ்வறவு திறமை இருந்தும் ஏன் நீ பல்கலைக்கழகம் செல்லவில்வை எனக் கேட்டேன். எனக்கு இருந்த பிரச்சினைகளின் நிமித்தம் என்னால் செல்ல முடியவில்லை, ஆனால் எனது தம்பி பல்கலைக்கழகம் செல்கின்றான் என்றாள். எந்த பல்கலைக்கழகம் என்று நான் வினவ, அது எமது பல்கலைக்கழகம் எனக்கூற எனக்கும் திகைப்பாக இருந்தது.

அவனை எவ்வாறு நான் அடையளாம் கண்டு கொள்வது என கேட்டேன். ஏனெனில் ஒரே பெயர்களில் பல மாணவர்கள் இருப்பதால், பெயரைக் கொண்டு அடையாளம் காண்பது கடினம்.

அப்போது அவள் கூறினாள், எனது தம்பி எந்நேரமும் விசில் அடித்துக் கொண்டிருப்பான். அதனைக் கொண்டு அவனை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று,...

உடனே அணைத்து மாணவர்களும், அந்த விசில் அடித்த மாணவனை நோட்டமிட,

விரிவுரையாளர் : நீ நினைத்தாயோ பேராசிரியர் பதவியை  ......... போன்று நான் பெற்றுக் கொண்டேன் என? போ வெளியே என அவனை வெளியனுப்பிவிட்டு பாடத்தை தொடர்ந்தார்

Popular

Recent

Ad

Learning Materials for Students