Click Below for School List
உயர்தரத்தின் தொழில்துறைப் பாடத்துறை (பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம்) தரம் 12இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரல - 2020
உயர்தரத்தின் தொழில்துறைப் பாடத்துறையின் கீழ் மாணவர்களைத் தரம் 12 இல் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 2020ம் ஆண்டிலிருந்து தொழில்துறைப் பாடத்துறை செயற்படுத்தப்படும் 423 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உட்சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இப்பாடத்துறைக்கு மாணவர்களை உட்சேர்க்கும்போது அவர்கள் க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தி பெற்றனரா இல்லையா என்பதைக் கவனத்திற் கொள்ளத் தேவையில்லை.
தொழில்துறைப் பாடத்துறையின் கீழ், தரம் 12இல் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து, தரம் 13இல் கீழே காட்டப்பட்டுள்ள தொழில்துறைப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Nஏஞ (தேசியத் தொழில்துறைத் தகைமை) 4ஆம் மட்டத்திற்கான தொழில்வாண்மைப் பயிற்சிப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
1. குழந்தை உளவியல் kற்றும் பாதுகாப்பு
2. சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
3. உடற் கல்வி மற்றும் விளையாட்டு
4. அரங்கற் கலை
5. நிகழ்ச்சி முகாமை
6. கலை மற்றும் கைவினை
7. உள்ளக வடிவமைப்பு
8. நவநாகரீக வடிவமைப்பு
9. கிராஃபிக் வடிவமைப்பு
10. சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்
11. தரை அழகு வடிவமைப்பு
12. பிரயோக தோட்டக் கலைக் கற்கை
13. கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி
14. உணவு உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி
15. நீர்வளத் தொழில்நுட்பக் கல்வி
16. பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி
17. நிர்மாணக் கல்வி
18. மோட்டார் இயந்திர தொழில்நுட்பக் கல்வி
19. மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கல்வி
20. ஜவுளி மற்றம் ஆடைத் தொழில் நுட்பக் கல்வி
21. உலோகக் கட்டுமான தொழில்நுட்பக் கல்வி
22. அலுமினிய கட்டுமான தொழில்நுட்பக் கல்வி
23. கலை மற்றும் வடிவமைப்பு
24. சுற்றாடல் கல்வி
25. கணணி வன்பொருள் மற்றும் வலையமைப்பு
26. உற்பத்தி
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2020 ஜுலை 20
இத்துடனுள்ள விண்ணப்படிவத்திற்கு அமைய தயாரிக்கப்பட்ட படிவத்தினை நீங்கள் உட்சேர எதிர்பார்க்கும் பாடசாலையின் அதிபருக்கு அனுப்பவூம். இதன்போதுஇ விண்ணப்பப்படிவத்தின் இரு பிரதிகளை நிரப்பிஇ ஒரு பிரதியினை தற்போது கற்கும் பாடசாலை அதிபரின் சான்றுப்படுத்தல் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டிய அதேவேளைஇ மற்றைய பிரதியினைப் புதிய பாடசாலையில் சேரும்போதுஇ தற்போது கற்கும் பாடசாலை அதிபரின் சான்றுப்படுத்தலுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலதிக தகவல்களுக்காக வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை 0112 788136ஃ 0112 786746 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவூம்.
பீ. பீ. விதானகே
கல்விப் பணிப்பாளர் (அனைவருக்கும் கல்விக் கிளை)