10.05.2020 சிலுமின சிங்கள நாளிதழ் கல்வி அமைச்சருடனான சிறப்பு நேர்காணல் ஒன்றினை பதிப்பித்துள்ளது.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை
இவ்விடுமுறையில் மாணவர்களுக்கான விசேட செயல்திட்டங்கள்
பாடத்திட்ட குறைபாடுகள்
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை
தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Source : Silumina e paper 10.05.2020 by ජයසූරිය උඩුකුඹුර
மொழிபெயர்ப்பு : guruwaraya.lk
கொரோனா காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பான அரசின் நடவடிக்கை என்ன?
இது தொடர்பான முடிவுகளை சுகாதாரதுறை அதிகாரிகளாகும். நாம் இது தொடர்பாக அவர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம். முன்னதாக மே 11, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும், தற்போதைய நிலைமைகளில் அது பொருத்தமில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது, சுகாதாரதுறை அதிகாரிகளின் பூரண சம்மதத்துடனாகும். பாடாசாலை மாணவர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாக ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. இந்த அடிப்படையில் தான் நாம் கடமையாற்றிக் கொண்டிக்கின்றோம். உலக சுகாதார அமைப்பின் முன்மொழிவுகளில் கூட, கொரோனா கட்டுப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கையாகவே பாடசாலைகளை ஆரம்பிப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, க.பொ.த சாதாரண தர மாணவர்களை முதலில் அழைப்பதற்கு ஏற்பாடுகள் உள்ளனவா?
பாடசாலைகள் மீள ஆரம்பிக்க நான்கு படிமுறைகளை கையாள நாம் திட்டமிட்டு;ள்ளோம்.
- முதற் கட்டமாக, அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டு, நச்சு தொற்று நீக்கலுக்கு உட்படுத்த்பட்டு, பாடாசலையை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளல். இதற்காக சுகாதார துறை மற்றும் பெற்றோரின் உதவிகளை பெற திட்டமிட்டுள்ளோம்.
- இரண்டாவது கட்டமாக, அதிபர்,ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, புதிய பாட நேர அட்டவணை மற்றும் வகுப்புகளின் செயற்பாட்டு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். guruwaraya.lk
- மூன்றாவது கட்டமாகத் தான் நாம் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களை பாடாலைக்கு அழைக்க இருக்கின்றோம். அதற்கு காரணம் சுகாதார பாதுகாப்பு இடைவெளி பேணப்பட்டு, கல்வி நடவடிக்கைகளை தொடர மாணவர்களுக்கு இயலுமானதாக இருக்கும். இந்த இரண்டு மாணவ குழுக்களை மாத்திரம் அழைப்பதால், பாடசாலையில் போதுமான அளவு இடம் காணப்படும். அதே போன்று போதுமான அளவு ஆசிரியர்களும் இருப்பர். ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் வரை பெரும்பாலான ஆசிரியர்களின் பங்களிப்பை இம்மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். guruwaraya.lk
- இதற்கும் பிறகு தான், நான்காவது கட்டமாக சாதாரண தர வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். முதற் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்தின் பின்னரே இந்த நான்காவது கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்
முன்பிள்ளை அபிவிருத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்கும் செயற்பாடும், இதற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்பட எதிர்பார்க்கின்றீர்களா?
முன்பிள்ளை அபிவிருத்தி நிலையங்களை மீள ஆரம்பிப்பதில் இதனை விட அவதானம் செலுத்தப்படல் வேண்டும். எனவே பாடாசலைகள் ஆரம்பிக்கப்பட்டு, நாட்டு நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பிள்ளது என சுகாதார துறை உறுதிப்படுத்திய பின்னர் முன்பிள்ளை அபிவிருத்தி நிலையங்களை ஆரம்பிப்பது சிறந்தது என அரசாங்கம் யோசனை செய்கின்றது. என்றாலும் இது தொடர்பாக முறையான வழிகாட்டல்கள் எதிர்வரும் தினங்களில் அரசாங்கத்தினால் வெளியிடப்படும். guruwaraya.lk
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள இக்காலப்பகுதியில் மாணவர்கள் சிறிது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதா?
ஆம். ஓடியாடி விளையாடும் மாணவர்கள் தொடராக மாதக் கணக்கில் வீடுகளில் தங்கியிரக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். இதனைக் கருத்திற் கொண்டு, மாணவர்கள் தாம் விரும்பிய தலைப்பில் நூலுருவாக்கம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களினால் எழுதப்படும் நூல்கள் பதிப்பிக்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புது வருட பிறப்பினை தொடர்ந்து வேலை ஆரம்பிக்கும் தருணத்தில் அநேக மாணவர்கள் புத்தக எழுதும் விடயத்தினை ஆரம்பித்துள்ளதாக எமக்கு அறியக் கிடைத்தது. இதன் மூலம் அவர்களில் மறைந்திருக்கும் திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
guruwaraya.lk
அதே போன்று கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தவறவிடப்பட்ட பாடப்பரப்புக்களை தொடர்வதற்காக இணையவழி மூல கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்காக தொலைக்காட்சி மற்றும் வானொலி மூல கற்பித்தல் நடவடி;கைள் தொடர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றது, இதனையொட்டி முதன் முறையாக கல்விக்கு என தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இணையம், வானொலி, தொலைக்காட்சி வசதி இல்லாத மாணவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கான கற்றல் மூலங்கள் தயாரிக்கப்பட்டு தபால் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தபால் திணைக்களத்துடன் கலந்துரையாடி தயார்படுத்தி வைத்துள்ளோம்.
பாடாசலை மாணவர்களுக்கு டெப் வழங்கும் கடந்த அரசின் நடவடிக்கையில் நிதி மோசடி நடைபெற்றதாக உங்களால் கொண்டுவரப்பட்ட குற்றஞ்சாட்டுக்கு என்ன நடந்தது?
இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை முன்னைய ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. அதற்கேற்ப சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கவனத்திற் கொள்ளப்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்தியுள்ளோம். டெப் வழங்குவதற்கு முன்னால் இணைய வசதி மின்சார வசதி, போன்ற அடிப்படை வசதிகள் அநேக பாடசாலைகளில் இல்லை. இவற்றை பூர்த்தி செய்யாமல் டெப் வழங்குவதில் பிரயோசனம் இல்லை. அவற்றுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முதலில் அமைத்துக் கொடுத்துவிட்டு டெப் வழங்குவது மாணவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும். guruwaraya.lk
தற்போது நாம் தொழிநுட்ப அடிப்படை வசதிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது கூட, இணைய கட்டணம் இன்றி, இ தக்சலாவ மூலம் இணைய கற்றல் நடவடிக்கைகளுக்கான வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
மாணவர்களுக்கு கல்குலேட்டர் பாவிக்க அனுமதி வழங்குவது எவ்வளவு தூரம் பொருத்தமானது?
எமது பாடசாலைகளில் சில பாடங்களுக்கு கல்குலேட்டர் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அவற்றை பாவிகக் சந்தர்ப்பம் வழங்குவது என்றால், ஏன் பரீட்சையில் அச்சந்தர்ப்பத்தை வழங்க முடியாது? இதற்காக சாதாரண கூட்டல், கழித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளத்தக்க கல்குலேட்டர் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றது. விருத்தி செய்யப்பட்ட விஞ்ஞான கல்குலேட்டர்கள் அல்ல. இதில் ஒரு பிழையும் இல்லை.
இம்முறை சாதாரண தர பெறுபேறுகளுடன், மாணவர்களின் உயர் அடைவுகளை பிரசித்தப்படுத்துவதை கைவிட்டமைக்கான காரணம் என்ன?
இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய பரீட்சையில் ஒரு சில மாணவர்கைள பாராட்டுவது நியாயமான விடயம் அல்ல. அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவனை விட ஒரு புள்ளி குறைவாக எடுக்கும் மாணவனுக்கு இதனால் ஏற்டும் மன அழுத்தம் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். எனவே திறமையானவன், திறமையற்றவன் என மாணவர்களை நாம் பிரித்துப் பார்ப்பது சிறப்பான விடயம் அல்ல. இவ்வாறு பிரித்து பார்ப்பது எமது நாட்டின் பழக்கமாக மாறவிட்டது. guruwaraya.lk
இந்த மதிப்பீடு பின்னரான காலப்பகுதியில் எங்கும் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. உயர் தரத்திற்கு செல்லும் போதோ, பல்கலைக்கழக நுழைவிற்கோ, தொழில் துறையில் இணைவதற்கோ எவ்விடத்திலும் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறிருக்க ஏன் நாம் தேவையற்ற இவ்விடயத்தின் மூலம் சக மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும். எனவே அதை கைவிட்டோம்.
நீங்கள் கூறும் மாணவர்களின் மன அழுத்தம் மிக உயர்வாக அமையும் ஒரு சந்தர்ப்பம், ஐந்தாம் தர மாணவர்களின் பரீட்iசை பெறுபேறுகளின் பின்னர், அம்மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அவர்களை தரப்படுத்துவது. அந்த நிலைமையும் கட்டுப்படுத்தப்படுமா?
ஆம். அவர்களும் எமது பிள்ளைகள். பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை விட குறைவாகப் புள்ளிகளைப் பெற்றால் பரீட்சையில் சித்தியடையாதவர்களாகக் கணக்கெடுக்கப்படுகின்றனர். ஒரு பரீட்சையில் 75 வீதமான புள்ளிகளைப் பெற்ற ஒருவரை எவ்வாறு சித்தி அடையாதவர் என குறிப்பிட முடியும். அம்மாணவன் திறமையற்றவனா? இவவாறாக மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை இல்லாnhழிக்க தற்போதைய நடைமுறையில் மாற்றம் தேவை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதற்கேற்ற முன்னெடுப்புக்களை திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
க.பொ.த உயர்தர பரீட்சையில், பரீட்சை வினாத்தாள் தயாரித்தலில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன?
இப்பிரச்சினை ஏற்படக் காரணம், இப்பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளமை ஆகும். இதன்போது பல மாற்று வழிகள் உருவாகின.
ஒன்று, நிச்சயிக்கப்பட்ட பாடப்பரப்பு நிறைவு செய்யப்படாமல் இருந்தால் பரீட்சையை பின்போடுவது.
இரண்;டு, நிச்சயிக்கப்பட்ட பாடப்பரப்பில் நிறைவு செய்யப்படாத பகுதியை தவிர்த்து வினாப் பத்திரங்களை தயாரிப்பது.
மூன்றாவது, மாணவர்களை பற்றி சிந்திக்காது, நிச்சயிக்கப்பட்ட பாடப்பரப்புகளிலிருந்து, நியம முறையில் பரீட்சை வினாப்பத்திரங்கள் தயாரித்து பரீட்சையை நடாத்துவது.
guruwaraya.lk
இந்த மூன்றாவது முடிவு, பொருத்தமில்லாத மாற்றுவழியாதலால், அது தொடர்பாக நாம் சிந்திக்கக் கூட மாட்டோம். எமக்கு உள்ளது முதலாவது அல்லது இரண்டாவது மாற்றுவழியை பிரயோகிப்பதாகும். நாம் தற்போது கடந்து கொண்டிருப்பது மே மாதமாகும். பரீட்சை நடைபெறவுள்ளது ஆகஸ்ட் மாதமாகும். போதுமான காலம் இருப்பதால், மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாத முறையில், ஒரு முடிவுக்கு வர நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
பாடசாலைகளில் மாணவர்களை முதலாம் தரத்தில் சேர்த்துக் கொள்ளும் நியதிகளில், நகர, கிராமம் இரண்டுக்கும் சமமாக இருப்பதால், ஒரு அசாதாரண நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளீர்களா?
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துத் கொள்வதில் போட்டித்தன்மை காணப்படுவது, நாட்டின் 64 பாடசாலைகளுக்கு மட்டுமாகும். இப்போட்டித்தன்மையை குறைப்பதற்கான மாற்றுவழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரசாங்கத்தை பொறுப்பெடுத்து, எமது கடமைகளை புரிய போதுமான கால அவகாசம் இருக்கவில்லை. நிச்சயமாக எதிர்கால்த்தில் இது தொடர்பான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொழினுட்பத்துறை தொடர்பாக தற்காலத்தில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது, கல்வி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் மேற்கொள்ள விளையும் மாற்றங்கள் என்ன?
புதிய விடயங்கள் பாடசாலை கலைத்திட்டத்திர் உள்வாங்கப்படுவது சிறந்த விடயம். எனினும் தற்போது நான் கண்ஓற்ற விடயம் என்னவெனில், தற்போது இருக்கும் கலைத்திட்ட முறையில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக உடற்கல்வி, சுகாதாரம் போன்ற பாடங்களில் மாணவர்களின் அடைவுகளை மதிப்பீடுவது எழுத்துப் பரீட்சை மூலமாகும்.
guruwaraya.lk
செயன்முறை பாடங்களை மதிப்படும் போது எவ்வாறு எழுத்துப் பரீட்சையை கொண்டு மாத்திரம் மாணவர்களை மதிப்பிட முடியும். இது போன்ற குறைபாடுகள் அகற்றப்பட்டு, புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படல் வேண்டும். அதாவது பரீட்சை முறையில் பாரிய மாற்றத்தினைக் கொண்டு வரல் வேண்டும். தற்போதைய பரீட்சை ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக முறையான தலைமைத்துவத்தை வழங்கி, புதிய தொழினுட்பங்களை பிரயோகித்து, மாணவர்களின் செயற்பாட்டு ரீதியிலான மதிப்பிடல் பணிகளுக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு முகங்கொடுத்து, அடுத்த கட்டத்திற்கு செல்ல நீண்ட காலம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதற்கு ஒரு தீர்வை வழங்க முடியாதா?
நீங்கள் கூறும் விடயம் முற்றுமுழுதாக உண்மையானது. டிசம்பர் மாதம் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் பெறுபேறுகள் வெளிவருவது மார்ச் மாதத்தில். அவர்களுக்கு உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுவது செப்டம்பர் மாதத்தில். இவ்வாறு கிட்டத்தட்ட 8 மாதங்கள் மாணவர்கள் வெறுமனே காலத்தை செலவழிக்கின்றனர்.
guruwaraya.lk
உயர்தர பரீட்சை நடைபெறுவது ஆகஸ்ட் மாதத்தில். பெறுபேறுகள் வெளியிடப்படுவது டிசம்பர் மாதத்தில். பல்கலைக்கழக நுழைய முடியுமாக அமைவது ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்த நிலையிலாகும். இதன்படி மாணவர்கள் பரீட்சை எழுதி இரண்டு வருடமும் மூன்று மாத காலப்பகுதியை வெறுமனே வீட்டில் கழிக்கின்றனர். மாணவர்களின் பெறுமதியான இக்காலப்பகுதியை வீணடிப்பது தேசிய குற்றமாகும். இந்தநிலைமையை மாற்றி புதிய சீர்திருத்தங்களினை உருவாக்க எமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக புதிய தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படும் என நீங்கள் கூறினீர்கள். தற்போது அதன் நிலைமை எவ்வாறு உள்ளது?
ஒரு வருடத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான அடிப்படை செயற்பாடுகளுக்கு நான்கு மாத காலம் செலவழிக்கப்படுகின்றது. இந்த கால நேரத்தை மீதப்படுத்தி, புதிய தொழினுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, யுPP ஒன்று உருவாக்கப்பட்டு, வருடாந்த இடமாற்ற செயற்பாடுகளை முன்னெடு;க்க திட்டமிட்டுள்ளோம். தற்போது இது தொடர்பான கற்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
நீண்ட காலமாக ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக பேசப்படுகின்றது. கல்வி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பாக உங்கள் கவனத்தை செலுத்தியுள்ளீர்ககளா?
உண்மைக்கும் ஆசிரியர் சம்பள முரண்பாடு காணப்படுகின்றது. திறமை வாய்ந்தவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலையில் அது தீவிரமாக காணப்படுகின்றது. ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படும் ஒருவரின் சம்பளம் 32 000 – 34 000 இடைப்பட்டது. இவர்களை விட குறைந்த கல்வி தகைமைகள் உடைய சில அரச சேவை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இதனை விட அதிகமாகும். guruwaraya.lk
உண்மையில் ஆசிரியர்களின் சம்பளம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. இதை மாற்றவே வேண்டும். எமது ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக நான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. எமது அடுத்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு முன்மொழிவில் ஆசிரியர்களின் புதிய சம்பள முறைமையை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.