22.07.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகரங்களை அழகுபடுத்தல் மற்றும் இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலை மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
பிரதேசத்திற்கு பொருத்தமான பசுமை சுற்றாடல் வேலைத்திட்டத்தை மேம்படுத்தல் மற்றும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள், மற்றும் சூழலுக்கும் பொருத்தமான சமூக ரீதியிலான அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஆகிய நகரங்களில் கீழ் குறிப்பிடப்பட்ட நகர அலங்காரம் மற்றும் இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலை மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
i. காலிமுகத்திடலில் பசுமை சுற்றுச் சூழல் அடிப்படை வசதிகள் வலைப்பின்னல் திட்டம்
ii. கொழும்பு 01 சாரணர் மாவத்தையில் அமைந்துள்ள பாதசாரிகளுக்கான வசதிகளைக்கொண்ட நடைப்பயிற்சி நிலையம்
iii. தலபத்பிட்டிய, கிம்புலாவல நகர விவசாய பூங்கா
இந்த திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கொழும்பு 05 இல் அமைந்துள்ள லும்பினி மண்டபத்தை (கலையரங்கை) நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைத்தல்
1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட லும்பினி மண்டபத்தில் (கலையரங்கில்) தற்பொழுது உள்ள வசதி போதுமானது அல்ல என்பதுடன் அங்கு ஒலிக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆசன எண்ணிக்கை, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய வசதிகள் காலத்திற்கு பொருத்தமான வகையில் அமையவில்லை. இதனால், அதனை நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதுடன் வகுக்கப்பட்ட திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும், இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கட்டிட நிர்மாணத்தின் அடிப்படையில் தேசிய போட்டித் தன்மையைக் கொண்ட பெறுகை நடைமுறைகளை கடைப்பிடித்து பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் நகர அபவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03.ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அக்ரஹார காப்புறுதி பரிந்துரையின் கீழான நன்மைகளை மேலும் விரிவுபடுத்துதல்
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினாலும் அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பரிந்துரை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் வழங்கப்பட்ட உடன்பாட்டை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட வகையில் செயல்ப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அக்ரஹார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தரமான சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்றை வகுத்தல்
• அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோருகின்றோம்.
04. கொவிட் 19 தொற்றை தடுக்கும் முயற்சியில் தொழில்துறை தொழில்நுட்ப (ITI) நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய தயாரிப்புக்கள் மற்றும் சந்தைப்படுத்தல்
கொவிட் 19 தொற்றை தடுக்கும் முயற்சியில் தொழில்துறை தொழில்நுட்ப (ITI) நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட புத்தாக்க தயாரிப்பை இலங்கை ஆயர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தினால் தயாரிப்பதற்கும் , கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கத்தின் பொருத்தமான முகவர் நிலையங்களின் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த தயாரிப்புக்களை விநியோகிப்பதற்கு காணப்படுகின்ற ஆற்றல் தொடர்பாக கண்டறிய வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக Alcohol சார்ந்த மூலிகைகள் (சர்க்கரை சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து) அடிப்படையிலான கைகளை சுத்தம் செய்வதற்கான ஜெல் மற்றும் திரவம் போன்றவற்றின் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள் மற்றும் தயாரிப்பு நடைமுறை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணக்கப்பாட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் ஆயர்வேத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி, அந்த நிறுவனத்தினால் அதன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினருக்கிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்களை விநியோகிப்பதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
05. Biofilm bio-fertilizer உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்ட மண் ஊட்ட உர பாவனையை நாடுமுழுவதும் மேம்படுத்துதல்
தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் கீழ் Biofilm bio-fertilizer உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்ட மண் ஊட்ட உர பாவனை தொடர்பாக 2018ஆம் ஆண்டு உத்தேச திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு, அதன் கீழ் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, குருணாகல், அம்;பாறை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் 3,500 ஏக்கரில் நெல் உற்பத்திக்காக இந்த உரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்த நிலப்பரப்பு 4000 ஏக்கர் வரையில் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் மூலம் வெற்றிகரமான பெறுபேற்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் விசேடமாக குருணாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 15,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்திக்காக இந்த உரம் பயன்படுத்தப்பட்டது. எதிர்வரும் வருடத்தில் இந்த உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி செய்யப்படும் நிலப்பரப்பை 120,000 ஏக்கர் வரையில் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில் கொண்டு விவசாய திணைக்களத்துடன் ஒன்றிணைந்து முறையான நடைமுறையொன்றின் கீழ் இதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. கிராமங்களில் பாலங்களை அமைப்பதற்கான திட்டம் - கால எல்லையை நீடித்தல்
கிராமங்களில் 1,210 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ' கிராமிய பாலத் திட்டம்' 2013ஆம் தொடக்கம் 3 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தோடு இதன் கீழ் 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் அளவில் 1318 பாலங்களை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ii ஆம் கட்டத்தின் கீழ் மேலும் 250 கிராமிய பாலங்களும் , iii ஆம் கட்டத்தின் கீழ் மேலும் 230 பாலங்களையும் நிர்மாணிக்கக்கூடிய வகையில் இந்த திட்டத்தின் கால எல்லையை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் செயலாக்கம் தாமதமடைந்துள்ளது. அத்தோடு கட்டம் ii மற்றும் கட்டம் iii இன் கீழான திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்த கால எல்லை முறையே 2021 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி வரையிலும் 2021 மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தில் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் ஒழுக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களில் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் 46 குடும்பங்களுக்காக மாகாண மதிப்பீட்டாளர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட வீட்டு வாடகையை மேலும் 2019 மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் 2020 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் செலுத்துவதற்கும் மண் சரிவு அனர்த்த நிலையை தொடர்ந்து வெளியேற்றுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட குடும்பங்களுக்காக 118 புதிய வீடுகளை அனர்த்த முகாமைத்துவ விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் தலையீட்டின் அடிப்படையில் விசேட திட்டம் என்ற ரீதியில் வேறு பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு அமைவாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம கோரளையின் பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடு காரணமாக வைப்பீட்டாளர்கள் இழந்த பணத்தை செலுத்துவதற்காக செயல்முறையொன்றை தயாரித்தல்
2015ஆம் ஆண்டு தொடக்கம் 5 சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம கோரளையின் பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் 507.59 மில்லியன் ரூபா, இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட முதன்மை கொள்வனவு நிறுவனம் என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிடப்பட்ட நிறுவனமொன்றின் ஊடாக திறைசேரி உண்டியல்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை நிறுவனம் அல்ல என்பது தெரியவந்ததுடன், இதுவரையில் சம்பந்தப்பட்ட பணத்தை அறவிடுவதற்கு இயலாமை காரணமாக இந்த கூட்டுறவு சங்கத்தின் வைப்பீட்டாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினரை உரிய வகையில் அறிந்துகொள்வதற்காகவும் வைப்பீட்டாளர்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை சிபாரிசு செய்வதற்காகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கத்தவர்களை கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமலாப அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்யும் கால எல்லையை நீடித்தல் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் சம்பந்தப்பட்ட கால எல்லை நிறைவடையும் தினத்தை நீடித்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பசுமை வலு அபிவிருத்தி மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்தும் முதலீடு என்ற ரீதியில் முதலாவது கட்டத்தின் கீழ் மொனராகலை நீர் மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கடன் தொகைக்கான செல்லுபடியான காலம் 2021 மார்ச் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பெறுகை செயற்பாடுகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்யும் தினம் மற்றும் கடன் தொடர்பான கால எல்லையை நிறைவு செய்வதில் மேலும் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக மொரகொல்லை நீர் மின்சாரத்திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்யும் தினத்தை 2023 அக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையிலும் கடனை பூர்த்தி செய்யும் கால எல்லையை 2024 ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு அமைவாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்திய போது மீள அமைக்கப்பட்ட வீட்டுடன் சேர்ந்த காணிகளுக்கு உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குதல்
மேல் கொத்மலை நீர் மின்சாரத் திட்டம் 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த திட்டத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடு, கடை மற்றும் வேலைத்தளங்கள் மாற்று இடத்தில் நிர்மாணித்து 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சம்பந்தப்பட்ட நஸ்டஈடு வழங்கும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் காணிகளுக்கான உரிமை இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதினால் இடம்பெயர்ந்த தரப்பினருக்கு மாற்றுத் தொழில் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை பயனாளிகளுக்கு விடுவிப்பதற்கான உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக நாணயக்கடிதம் பிறப்பிப்பதற்காக வழங்கப்பட்ட திறைசேரி பிணையின் செல்லுபடியான காலத்தை நீடித்தல்
இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியினால் மக்கள் வங்கிக்கு பிறப்பிக்கப்பட்ட 11 பில்லியன் ரூபா பெறுமதிக்கான திறைசேரி பிணையின் செல்லுபடியான கால எல்லை 2020 ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த திறைசேரி பிணையின் செல்லுபடியான கால எல்லையை அன்றைய திகதி தொடக்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. தெற்கு அபிவிருத்தி திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் அமைக்கப்பட்ட இடைக்கால சபையின் பணிகளை பூர்த்தி செய்தல்
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தென் மாகாண அபிவிருத்தி சபை சட்ட ரீதியில் ஸ்தாபிக்கப்படும் வரையில், தலைவர் ஒருவர் மற்றும் 9 அங்கத்தவர்களைக்கொண்ட இடைக்கால சபையொன்றை அமைப்பதற்கு தேவையான பணியாளர் சபையினரை இணைத்துக் கொள்வதற்கு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் தென் மாகாண அபிவிருத்தி சபை திருத்த சட்ட மூலம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இடைக்கால சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் தற்பொழுது பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், எதிர்கால கட்டிட நிர்மாணங்கள் 2020 ஆம் ஆண்டு பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கமைவாக தென் மாகாண அபிவிருத்தி சபை திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால சபையின் செயற்பாடுகளை பூர்த்தி செய்தற்கும், பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான பெறுகையை பெற்றுக்கொள்வதற்காகவும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2020/2021 வருடத்திற்காக இலங்கையில் பொது காப்புறுதி தொழிற்துறையில் 30 சதவீதம் அவசிய மறுகாப்பீடு அடிப்படையில் மறுகாப்பீட்டு பாதுகாப்பு பெறுகையை மேற்கொள்ளுதல்
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் மூலம் இலங்கையில் பொதுவான காப்புறுதி நடவடிக்கைகளுக்கு அவசியமான 30 சதவீத மறுகாப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோன்று தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் இதற்காக, மறு காப்பீட்டாளர்கள் உள்ளடக்கம் (Retrocession) ஏற்றுக் கொள்ளப்பட்ட மீள் காப்பீட்டாளர்கள் / மீள் காப்பீட்டாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக 2020/2021 ஆண்டுக்காக இதனை மீண்டும் மீள் காப்பீட்டுக்கு உள்வாங்குவதற்காக சர்வதேச போட்டி மிக்க கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. அத்தோடு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்ட தினம் தொடக்கம் 18 மாத காலத்திற்காக 985.5 மில்லியன் ரூபா மொத்த தொகையை Ms J.B. Boda & Co(s) Pte.Ltd (பிரதான மீள் காப்பீட்டாளர் - M/s Everest Reinsurance Company )என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14. 2020/2021 ஆண்டின் வேலை நிறுத்தங்கள், கலவரங்கள், அமைதியின்மை மற்றும் பயங்கரவாத நிதி தொடர்பிலான மீள் காப்புறுதியை உள்வாங்குவதற்கான பெறுகையை மேற்கொள்ளுதல்
தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் மூலம் இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனத்தில் பணி பகிஷ்கரிப்பு, அமைதியின்மை மற்றும் பயங்கரவாத நிதி தொடர்பிலான காப்புறுதி வழங்கப்படுவதுடன், அந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள் காப்பீட்டு முகவர்களிடம் தேசிய காப்பீட்டு பொறுப்பு நிதியத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2020/2021 ஆண்டுக்காக இதன் மீள் காப்பீடு உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச போட்டிமிகு கேள்வி மனு கோரப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்கப்பட்ட தினம் தொடக்கம் 18 மாத காலங்களுக்கு மீள் காப்புறுதி 116.39 மில்லியன் ரூபா மொத்த தொகைக்கு வரையறுக்கப்பட்ட Ms J.B. Boda & Co (s) Pte. Ltd. ( பிரதான மீள்காப்பீட்டாளர் – M/s Chaucer Syndicate 1084 ) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
15. இரசாயன உரத்தை கொள்வனவு செய்தல் - 2020 பெரும்போகம் (செப்டெம்பரில் வழங்குதல்)
2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தேவைக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் (லக்போர) வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர (கொமர்ஷல் உரம்) நிறுவனத்திற்காக தேவையான உரத்திற்கான பெறுகையை மேற்கொள்வதற்காக சர்வதேச பகிரங்க போட்டிமிக்க விலைகள் கோரப்பட்டுள்ளன. இந்த விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்ட சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ்கண்ட வகையில் உரத்தை விநியோகித்தல், இறக்குமதி செய்தல். மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• ஒரு மெற்றிக் தொன் 259.99 அமெரிக்க டொலர்கள் வீதம் யூரியா (கிரனியுலா) 60 000 + 5% சதவீதம் மெற்றிக்தொன் கொள்வனவை Valiancy International Trading Private Limited நிறுவனத்திடம் வழங்குதல்
• ஒரு மெற்றிக் தொன் 266.48 அமெரிக்க டொலர்கள் வீதம் யூரியா (ப்ரெல்ட்) 7318 + 5% மெற்றிக்தொன் யுAgrifert Liven International Private Limited நிறுவனத்திடம் வழங்குதல்
• ஒரு மெற்றிக் தொன் 248 அமெரிக்க டொலர்கள் வீதம் மியுரேட் ஒவ் பொட்ரேஸ் (சிவப்பு, ரோஸ் மற்றும் வெள்ளை) 20000 + 5% மெற்றிக்தொன் Agricultural Resources and Investments Private Limited நிறுவனத்திடம் வழங்குதல்
• ஒரு மெற்றிக் தொன் 249 அமெரிக்க டொலர்கள் வீதம் மியுரேட் ஒவ் பொட்ரேஸ் (சிவப்பு, ரோஸ்) 4700 + 5% மெற்றிக்தொன் Agricultural Resources and Investments Private Limited நிறுவனத்திடம் வழங்குதல்
16. இலங்கைக்குள் ஒரு பொதுவான நீர்நிலை முகாமைத்துவ பிரவேசத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மூலோபாய பொறிமுறை ஒன்றை தயாரிப்பதற்கான குழு ஒன்றை நியமித்தல்
இலங்கைக்குள் ஒரு பொதுவான நீர்நிலை முகாமைத்துவ பிரவேசம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து கொள்கைகளையும் மதிப்பீடு செய்து தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்காக உள்ள நீர் மற்றும் அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் மூலோபாயங்களை வகுப்பதற்கான ஆலோசனையை ஒழுங்குபடுத்துவதற்காக சுற்றாடல் நலன்விரும்பி பேராசிரியர் மத்தும பண்டார தலைமையில் நீர்முகாமைத்துவ துறையின் முன்னோடிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
17. தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக அரச வங்கி கட்டமைப்பை முறையாக முன்னிலைப்படுத்தி செயல்திறன் மிக்கதாக முன்னெடுத்தல்
கொவிட் 19 தொற்றிற்கு மத்தியில் இலங்கை பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக அரச வங்கி கட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் முறையாகவும் செயல்திறன்மிக்கதாகவும் செயல்படவேணடியுள்ளது. இருப்பினும் இதில் அரச வங்கிகள் அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களுக்கு அப்பாலும் சம்பந்தப்பட்ட சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்ப்பாட்டு விதிமுறைகளை மீறிய வகையில் சமீப காலப்பகுதியில் செயல்பட்டிருப்பதாக தெரிகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தை அடையாளங் கண்டு மீண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில் உடனடி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்காக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க அவர்களின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறையின் முன்னோடிகளைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18. களுத்துறை பெரிய ஆஸ்பத்திரி மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகள் என்ற ரீதியில் தரமுயர்த்துதல்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை ஸ்தாபிப்பதற்காக தற்பொழுது திட்டம் வகுக்கப்பட்டு வருவதுடன் அதன் ஆய்வு நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உத்தேச மருத்துவ பிரிவை களுத்துறை பெரிய ஆஸ்பத்திரிக்குள் அமைக்கக்கூடிய வகையிலும் சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு வழங்கக்கூடிய வகையில் களுத்துறை பெரிய ஆஸ்பத்திரி மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலை என்ற ரீதியில் தரமுயர்த்துவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.