Breaking

Search This Blog

Cabinet Decision : Tamil

Cabinet Decision : Tamil


Cabinet Decisions 
කැබිනට් තීරණ 
அமைச்சரவை முடிவுகள் 
15 July 2020

Government Information Centre has released the decisions of cabinet meeting held on July 15th 2020.
 

2020.07.15 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான Balloon Extraction Catheter விநியோகிப்பதற்கான பெறுகை

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைவாக இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் 40  Balloon Extraction Catheter  களை விநியோகிப்பதற்கான பெறுகையை M/s Ceegeez Associates என்ற நிறுவனத்திற்கு மொத்த செலவாக 207.74 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. தற்பொழுதுள்ள பெட்ரோல் (92 Un1) நீண்ட கால ஒப்பந்தத்தின் மொத்த கப்பல் அளவிற்கு மேலதிகமாக 50 சதவீதத்தை கொள்முதல் செய்தல்

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2020 ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரையிலான 09 மாத காலப்பகுதிக்குள் பெட்ரோல் (92 Un1) 1,800,000 பீப்பாக்களை (மில்லியன் 1.8) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூரிலுள்ள M/s Vitol Asia Pte.Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய பெறுகை வழிகாட்டி ஆலோசனை 3.6 இன் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக மீண்டும் 50 சதவீதத்திற்கு சமமான அளவிலுள்ள நிபந்தனை மற்றும் ஒழுங்குறுத்தலின் கீழ் கொள்வனவு செய்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. 1500 கிலோமீற்றருக்கான Aerial bundle conductor  என்ற வான் கம்பியை விநியோகித்தல் மற்றும் வழங்குவதற்கான ஒப்பந்தம்

இலங்கை மின்சார சபையின் விநியோக 2 வலயங்களுக்கான 1500 கிலோமீற்றருக்கான Aerial bundle conductor  என்ற வான் கம்பியை விநியோகித்தல் மற்றும் வழங்குவதற்கான ஒப்பந்த பெறுகை மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய 900.50 மில்லியன் ரூபாவிற்கு (வட் வரி அற்ற) தொகைக்கு ஆM/s Sierra Cables PLC, Sri Lanka என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக மின் பாவணையாளர்களுக்கு நிவாரணத்தை வழங்குதல்

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஐ. மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.

ஐஐ. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஐஐஐ. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

05. இலங்கை அரசாங்கம் மற்றும் விவசாய வனவியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச பேரவை, The International Council  for Research in Agroforestry, ICRAF இடையில் உபசரிப்புக்கான அரச உடன்படிக்கையை எட்டுதல்

காலநிலை பருவநிலையினாலான பாதகமான தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையை வலுவூட்டுவதற்கு தேவையான சர்வதேச விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம், விவசாய உற்பத்தி ஆய்வு தொடர்பான விவசாய வனவியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச பேரவை, உபசரிப்புக்கான அரச உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வளங்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. தேசிய தொழிற்சாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பெறுகை வழிகாட்டி ஆலோசனைகளில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்

அரச பெறுகை வழிகாட்டி ஆலோசனைகளில் உள்ளூர் தெரிவிற்காக ஏற்பாடுகள் இருந்த போதிலும் இதன் ஏற்பாடுகள் மூலம் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்குப் போன்று நிறுவனங்களுக்கும் பயன்களை பெற்றுக் கொள்வதற்குள்ள ஆற்றல் வரையறுக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமையின் கீழ் தேசிய நிறுவனம் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் ஒத்துழைப்பை கூடுதலான வகையில் எதிர்பார்க்கின்றனர். இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கூடுதலான பெறுமதியை சேர்க்கக்கூடிய உள்ளூர் தொழிற்துறை என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ள தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள், மென்பொருள் மற்றும் வன்பொருள் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளுக்காக கீழ்கண்ட வகையில் தேசிய தெரிவை வழங்கக்கூடியது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச நிறுவனத்திற்காக பொருட்கள் மற்றும் சேவை பெறுகையை மேற்கொள்ளும் பொழுது ஆகக்குறைந்த வகையில் 51 சதவீத உரிமை இலங்கை பிரஜைகளைக் கொண்டுள்ள நிறுவனம், உள்ளூர் நிறுவனம் என்ற ரீதியில் அடையாளங்கண்டு 5 வருட காலத்திற்காக பின்வரும் வகையில் தேசிய தெரிவுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

i. உள்ளூர் பெறுமதி சேர்த்தல் ஆகக்குறைந்த ரீதியில் 50 சதவீதமான உள்ளூர் தயாரிப்புக்களுக்காக மாத்திரம் அலுவலக தளபாடங்கள் மற்றும் உபகரண தேவைக்காக பெறுகையை மேற்கொள்ளுதல்

ii. அனைத்து மென்பொருள் தேவைகளுக்காக உள்ளூர் நிறுவனங்களில் மாத்திரம் பெறுகையை மேற்கொள்ளுதல் மற்றும் அதற்கமைவாக செயற்படுவதில் சிரமம் ஏற்படுமாயின் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திலும் திறைசேரியின் அனுமதியுடன் மாத்திரம் அவ்வாறானவற்றை கொள்வனவு செய்வது தேசிய நிறுவனம் அல்லாத நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளுதல்

iii. அரச நிறுவனத்திற்கு தேவையான கணணி வன்பொருட்களுக்கான விவரக்குறிப்புகள் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் தயாரிக்கப்படுவதுடன், ஏதேனும் நிறுவனமொன்றில் 25 சதவீத உள்ளுர் பெறுமதி சேர்ப்புடன் மேற்கொள்ளப்படுமாயின் பெறுகை மதிப்பீடு செயற்பாடுகளில் அந்த நிறுவனத்திற்காக 30 சதவீத தெரிவை வழங்குதல்

iv. வீடு , வீதி நிர்ப்பாசனம், நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் கட்டமைப்பு உள்ளிட்ட நிர்மாணப்பணிகளை உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடம் வழங்குவதுடன், வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்காக துணை ஒப்பந்தங்கள் வழங்கப்படுமாயின் அந்த ஒப்பந்தங்களின் பெறுமதி தற்காலிகமாக நிதி அற்ற ஒப்பந்தங்களின் விலை 10 சதவீதத்திற்கு மேற்படாது இருக்க வேண்டும்.

v. மேலே குறிப்பிட்ட வகையில் செயற்படுவதற்காக தேசிய பெறுகை ஆணைக்குழுவிடம் கேட்டறிந்து உத்தேச பெறுகை வழிகாட்டிகளை வெளியிடுதல்.

07. 2020 சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம்

2020ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறவடை ஜுலை மாதம் 2ஆம் வாரத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதினால் மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலப் பரப்பிற்கு அமைவாக ஆகக்கூடிய ரீதியில் ஒரு விவசாயிடமிருந்து 5000 கிலோ நெல் வீதம் என்ற ரீதியில் தரத்துடனான சம்பா, நாடு மற்றும் கீரி சம்பா முதலான வகை நெல் 1 கிலோ கிராமிற்காக 50 ரூபா மற்றும் நீர்த்தன்மையுடனான நெல் கிலோ ஒன்றிற்காக 42 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையை வழங்கி உத்தேச நெல் கொள்வனவிற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை ஸ்தாபிப்பதற்காக (உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) செயலாக்க ஆய்வுகளை மேற்கொள்ளுதல்

சௌபாக்கிய தொலைநோக்கு அபிவிருத்தி பிரவேசத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்திற்கான வசதிகளை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு 10 மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (High Tech Universities) அமைவான செயலாக்க ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக நுவரெலியா, களுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, புத்தளம், மன்னார், முல்லைத்தீவு, காலி, பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய 10 மாவட்டங்களுக்கு அருகாமையில் செயலாக்க ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

09. இலங்கை உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்கா

உயர் தொழில்நுட்ப ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான இறக்குமதிக்காக மாற்றீட்டு தயாரிப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்கா மற்றும் இலங்கை உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஸ்தாபிக்கும் திட்டத்;தை பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்களுக்கு தமது கருத்துக்களை வணிக ரீதியிலான தயாரிப்பு வரையில் முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணை நிறுவனமான சர்வதேச மரபணு தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் உயிரியல் தொழில் நுட்ப மத்திய நிலையத்தினால் முன்மொழியப்பட்ட இலங்கை உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக இந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய வலய அறிவு மத்திய நிலையமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் மற்றும் வளர்ச்சி ஹார்மோன் உள்ளிட்ட 10 உயிரியல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இந்த நிறுவனத்தினால் உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கைக்கு நன்மையானதாகும்.

இதற்கமைவாக ஹோமாகம, பிட்டிபன, அரம்பவத்தை பிரதேசத்தில் உள்ள 13.2 ஏக்கர் உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்காவொன்றை ஸ்தாபிப்பதற்கும்BiotechnoPlex கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாளரினதும் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளரினதும் இணை தலைவர் தலைமைத்துவம் என்ற ரீதியில் செயற்பாட்டுக் குழுவொன்று மற்றும் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த விசேட நிபுணர்களின் தொழில்நுட்ப குழுவொன்றினையும் நியமிப்பதற்கான திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. மன்னார் தீவு கரையோர பிரதேசத்தில் உயர் தரத்திலான இல்மனைட்டை பெற்றுக் கொள்ளும் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை

அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் உள்ளூர் நிறுவனத்துடன் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக மன்னார் தீவின் கரையோர பிரதேசத்தில் இல்மனைட்டைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த ஆய்வு எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்கப்படவிருப்பதாக விடயங்களை குறிப்பிட்டு நாளாந்த ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்த செய்தி மற்றும் அது தொடர்பாக இணையதளங்களில் வெளிவரும் திட்ட அறிக்கை தொடர்பாகவும் தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இவ்வாறான ஆய்வொன்று தொடர்பில் அனுமதி வழங்க வேண்டிய நிறுவனத்தினால் அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதும் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், அது தொடர்பில் விடயங்களை கவனத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

11. 11. திறனாற்றல் அபிவிருத்தி தசாப்தம் 2021-2030

சமாதானத்தைப் போன்று நியாயமான சமூகமொன்றை உருவாக்குவதற்காக பேண்தகு அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னோடிகளாக இளைஞர் சமூகத்தை பங்குபெறச் செய்து, அதற்காக அவர்களது அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துதல் அத்தியாவசியமாகும். எதிர்கால சந்ததியினரான இளைஞர்களின் திறன்களை அபிவிருத்தி செய்யும் 'சௌபாக்கிய தொலைநாக்கு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் மூலம் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டின் மனித வள சக்தியின் திறன் முறையை 10 சதவீதமாக குறைத்து இலங்கை ஆசியாவின் மனித வள அபிவிருத்தி கேந்திர நிலையமாக மேம்படுத்துவதற்காக நாட்டில் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளை மேம்படுத்தி எதிர்காலத்திற்குப் பொருத்தமான பிரஜைகளை உருவாக்குவதற்காக சமத்துவமான கல்வி மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில் மற்றும் திறனாற்றல் கல்வி போன்ற துறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புக்கள் 2021-2030 வரையிலான காலப்பகுதியில் இலங்கையை ' திறன் அபிவிருத்தி தசாப்தமாக  என்று பிரகடனப்படுத்துவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லையை நீடித்தல்

சேவைகொள்வோர் (முதலாளிமார்), ஊழியர், தொழில்சங்க மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் எட்டபட்ட உடன்படிக்கைக்கு அமைவாக கொவிட் 19 தொற்றிக் காரணமாக 2020 மே மாதம் மற்றும் ஜுன் மாதம் ஆகிய 2 மாதங்களுக்காக வேலை இல்லாமையினால் ஊழியர்கள் வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிறுவன ஊழியர்களுக்கு அவர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட முழுமையான சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்கு அமைவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 என்ற இரண்டிலும் மிகவும் பயனுள்ள தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதற்கமைவாக செயல்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாத கால எல்லைக்காக ஊழியர் சம்பளத்தை செலுத்துவதற்காக தரப்பினருக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு தொடர்பாக தகவல்களை திறனாற்றல் தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்பிக்கப்பட்டது.

Popular

Recent

Ad

Learning Materials for Students