Instructions for GCE A/L 2020 Students
Exam Department
අ.පො.ස. උසස් පෙළ 2020 සිසුන් සඳහා උපදෙස්: විභාග දෙපාර්තමේන්තුව
க.பொ.த உயர்தர 2020 மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் : பரீட்சைத் திணைக்களம்
First Click Below link and Submit your details to education ministry
පළමුව පහත සබැඳිය ක්ලික් කර ඔබේ තොරතුරු අධ්යාපන අමාත්යාංශයට ඉදිරිපත් කරන්න
முதலில் கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கவும்
Instructions (Tamil Translation Available)
ஊடக அறிக்கை 07.10.2020
க.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர்
நடைபெறும் தினம் 2020.10.12 - 2020.11.06
விண்ணப்பதாரர்கள் 362, 824
பரீட்சை நிலையங்கள் 2648
ஒருங்கிணைப்பு நிலைய்கள் 316
அறிவுறுத்தல்கள்
- பரீட்சைகள் மு.ப. 8.30 க்கு ஆரம்பிக்கும். கோவிட் காரணமாக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் மு.ப. 7.30 க்கு அனைத்து பரீட்சகர்களும் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரல் வேண்டும். ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லதி சாரதி அனுமதிப்பத்திரம் முன்வைக்கப்படல் வேண்டும். Guruwaraya.lk
- பரீட்சைக்கு வருகை தர முன்னர் நேரகாலத்துடன் அனுமதி அட்டையை பரீட்சிப்பதுடன் , தான் விண்ணப்பித்த பாடங்கள். பாட எண், மொழிமூலம் கையொப்பத்தை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். Guruwaraya.lk ஏதும் மாற்றங்கள் இருப்பின் பரீட்சை திணைக்களத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். Guruwaraya.lk
- 3 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ள பரீட்சைத்தாள்களை வாசித்து விளங்க மற்றும் கேள்விகளை தெரிவு செய்ய மேலதிக 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
- 33, 65, 66 ,67 ஆகிய பாடங்களுக்கு மாத்திரம் சாதாரண கல்குலேட்டர் பாவிக்க அனுமதி வழங்கப்படும். Guruwaraya.lk
- ஆள்மாறாட்டம் செய்வது, குறிப்புகள் வைத்திருப்பது, அடுத்தவரின் உதவியை நாடுவது, அடுத்தவருக்கு உதவுவது, பரீட்சை நிலையம் மற்றும் அதன் சூழலில் தேவையற்ற விதத்தில் நடமாடுவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். ஸ்மார்ட் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி அனுமதிக்கப்படாத இலத்திரனியல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு பரீட்சை மோசடிகள் நடைபெறுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு நிலையப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்ட்டுள்ளது. Guruwaraya.lk அவ்வாறு மோசடிகள் புரியும் பரீட்சகர்களுக்கு 5 வருடங்கள் பரீட்சைத்தடை விதிக்கப்படுவதுடன் இம்முறை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும்
- பரீட்சை நடைபெறும் வேளையில் வௌிநபர்களினால் இடையூறுகள் விளைவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக பரீட்சை திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்கள் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.Guruwaraya.lk
- டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கோவிட் நிலைமை அல்லது யாதும் நோய் நிலைமை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக Guruwaraya.lk சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு முப்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உரிய அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- பரீட்சை நடைபெறும் காலவீச்சில் பரீட்சை நிலையத்தினுள் வௌிநபர்கள் உள்நுழைவது, கட்டிட நிர்மாண வேலை, வகுப்புகள் நடாத்துவது, விளையாட்டு நிகழ்ச்சி, கூட்டங்கள் நடாத்துவது என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பாக பாடசாலை அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- அனைத்து முறைப்பாடுகள்Guruwaraya.lk தொடர்பாக விசாரிக்க விசேட விசாரணை பிரிவு தயாராக இருப்பதுடன், பரீட்சை மேற்பார்வை குழு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- பரீட்சை மோசடி தொடர்பாக அல்லத அது தொடர்பான சந்தேகங்கள் எழின், தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலம் பரீட்சை திணைக்ளத்துக்கு முறைப்பாடு செய்யலாம். Guruwaraya.lk
முக்கிய குறிப்பு
அனைத்து பரீட்சை நிலையங்கள் தொடர்பில், மோசடிகள் தொடர்பாகவும், சுகாதார அறிவுரைகள் பின்பற்றுவதி தொடர்பாகவும் அவதானிக்க முதன்முறையாக மேலதிக உதவி நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏதும் மீறல்கள் நடைபெறின் பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்க அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Guruwaraya.lk
அவசர தொலைபேசி 1911
பரீட்சை ஆணையாளர் அலுவலகம் 0112 785 211, 0112 785 212
பாடசாலை பரீட்சை ஏற்பாடு மற்றும் பெறுபேறு கிளை 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314
Source : Government Information Center
Translation Guruwaraya.lk