Warning to the Public
මහජනයාට අනතුරු ඇඟවීම
විදේශ රැකියා වංචා
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி
31 Aug 2020
பொதுமக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட நிலைமையில் இது எவ்வாறு நடைபெற்றது என பொலிஸாரினால் விளக்கப்பட்டது. guruwaraya.lk
ஐரோப்பிய மற்றும் கொரியா வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்களினூடு விளம்பரங்கள் வௌியிடப்பட்டு, விண்ணப்பங்களை அனுப்புவதற்கான முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்பன வழங்கப்படுகின்றன.guruwaraya.lk
பின்னர் விண்ணப்ப படிவத்தின் ஊடாக பெயர், முகவரி, வதிவிடம், பெற்றோரின் தகவல்கள், தேசிய அடையாள அட்டையின் பிரதி, கடவுச்சீட்டின் பிரதி போன்ற தகவல்களை சேகரித்துக் கொள்கின்றனர்.guruwaraya.lk
பின்னர் குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளீர்கள், போதுமான தகைமைகள் உண்டு எனக்கூறி, உங்கள் விண்ணப்பத்தை குறித்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் , எனவே வங்கி சேமிப்பு உத்தரவாதம் தேவை. கணக்கொன்றினை உங்கள் பெயரில் ஆரம்பித்து குறைந்தது 2 மில்லியன் வைப்பிலிட்டு அக்கணக்கு தொடர்பான சான்றிதழினை அனுப்பி வைக்குமாறு வினவப்படுகின்றனர். guruwaraya.lk சிலர் 5, 6 மில்லியன் வரை வைப்பிலிட்டு அது தொடர்பான ஆவணங்களை வழங்குகின்றனர்.
பின்னர் அவர்களின் மோசடி ஆரம்பமாகின்றது. ஏற்கனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவலை வைத்துக்கொெண்டு, குறித்த நபர் பயன்படுத்திய தொலைபேசி காணாமல் போய்விட்டதாகக் கூறி, அதே இலக்கத்தில் புதிய சிம் இனை தொலைபேசி சேவை வழங்குநரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். guruwaraya.lk
பின்னர் அந்த நம்பரில் இருந்து வங்கியைத் தொடர்பு கொண்டு, தனது தொலைபேசி தொலைந்து விட்டதாகவும், தனது வங்கியில் இவ்வளவு பணம் இருப்பதாகவும், அதை அவசரமாக பெற வேண்டியுள்ளதாகவும் குறித்த பின் இலக்கத்தை தனது தொலைபேசிக்கு அனுப்புமாறும் வினவுகின்றனர்.guruwaraya.lk
பின்னர் வங்கி வினவும் இரகசிய உறுதிப்படுத்தல் தகவல்களை (பெற்றோரின் தகவல்கள், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை போன்ற) குறித்த விண்ணப்பத்தில் இருந்து பெற்று பாடமாக்கி, விரைவாக வழங்குவதால், வங்கி சந்தேகமின்றி புதிய கடவுச்சொல்லினை வழங்க அவர்கள் பணத்தை அதனூடாக பெற்றுக் கொள்கின்றனர்.guruwaraya.lk
ஆரம்ப காலங்களில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட வைத்து மோசடி செய்தனர். தற்போது, குறித்த விண்ணப்பதாரிகளின் வங்கிக் கணக்கில் வைப்பில வைத்தே அவற்றை மோசடி செய்கின்றனர்.
எனவே இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகின்றனர்.
நன்றி Hiru TV
மொழிபெயர்ப்பு guruwaraya.lk