Circular
Girama Niladhari
Office Days
ග්රාම නිලධාරී කාර්යාල දින
கிராம அலுவலர்களின்
அலுவலக தினம்
முக்கிய விடயங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு (மூல ஆவணம் சிங்களத்தில் உள்ளது)
03. கிராம அலுவலர்கள் தமது ஓய்வு நாளைத்தவிர வாரத்தின் அடுத்த 6 நாட்களும் , 24 மணித்தியாலங்களும் தமது பதவி நிலைக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டப் பிரதேசத்தில் சேவை புரிய கடமைப்பட்டுள்ளனர்.
04. பொதுமக்கள் தமது தேவைகளை இலகுவாகவும், வினைத்திறனாகவும் செய்து கொள்வதற்காக, கிராம அலுவலர் தனது அலுவலகத்தில் பின்வரும் நேரங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.
- அனைத்து கிராம அலுவலர்களும் வாரத்தின் செவ்வாய், வியாழன் தினங்களில் முழு நாட்களும் மற்றும் சனிக்கிழமை பி.ப. 12.30 வரையும் பொதுமக்களை சந்திப்பதற்காக தமது அலுவலகங்களில் இருக்க வேண்டும். முழு நாளும் எனக்குறிப்பிடுவது காலை 8.30 தொடக்கம் பி.ப. 4.15 வரையாகும்.
- திங்கட்கிழமை பிரதேச காரியாலங்களுக்கு அழைப்பிக்கப்படலாம். அழைப்பிக்கப்படாவிட்டால் கிராம அலுவலர் தனது கடமைக்காக வேண்டி பிரதேச காரியாலயத்துக்கு செல்லலாம்.
- கிராம அலுவலர்களின் ஓய்வு நாளாக புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஒரு நாளை பயன்படுத்தலாம்.
இந்நடைமுறை 01.10.2020 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்
முழுமையான ஆக்கத்திற்கு சிங்கள ஆவணத்தை வாசிக்கவும்