Breaking

Search This Blog

08/08/2020

Interview with the Commissioner of Examinations

Interview with the Commissioner of Examinations


View of the Commissioner of  Exam Department   Corona and GCE A/L.

විභාග කොමසාරිස් ජනරාල් බී.සනත් පූජිත මහතා සමග ඩි.එස්. සේනානායකය විද්‍යාලයේ ජනමාධ්‍ය කවයේ විශේෂ සාකච්ඡාව

Source : Exam Department.


Here is the Tamil Translation

பரீட்சை ஆணையாளர் திரு சனத் பூஜித , கொழும்பு டீ. எஸ் சேனாநாயக்க பாடசாலையின் ஊடக குழுவினருடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தவை.

கோவிட் பரவலுக்கு முன்னரே , பரீட்சைத்திணைக்களத்தின் நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ள நாம் சில நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தோம். பொதுப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலையில் கோருவதற்கு நாம் இவ்வருட ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தோம்.


தரம் ஐந்து புலைமைப் பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர விண்ணப்பங்களை நிகழ்நிலையில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்நிலையில் தரம் ஐந்து மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டன. இம்முறைமை வெற்றியளித்துள்ளது. தற்போது எந்நேரத்திலும் பரீட்சையை நடாத்த இயலுமாக உள்ளது. 10 020 ஆரம்ப வகுப்புகள் உள்ள பாடசாலைகளில், 45 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளன. மிக கஸ்டப் பிரதேச பாடசாலைகளும் இதில் உள்ளடங்கும். குறித்த 45 பாடசாலைகளில் மாணவர்கள் இன்மையால் அவை விண்ணப்பிக்கவில்லை. இது போன்றே உயர்தர பரீட்சை விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.


பாடசாலைகளுக்கு Username, Password வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் தமது க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை முழுமையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவை தொழினுட்பத்தின் அனுகூலங்களாகும்.

நிகழ்நிலை கல்வி என்பது, வசதியுள்ள ஒரு சாராருக்கு மட்டுமே சந்தர்ப்பத்தை வழங்கும். அத்துடன் நாட்டில் காணப்படுகின்ற வளங்களின் தன்மைக்கு ஏற்ப அனைவருக்கும் அவ்வசதி பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும், எல்லா மாணவர்களுக்கும் இவ்வசதிகள் இல்லை. அத்துடன் நிகழ்நிலை கல்வி மூலம் அனைத்தையும் வழங்க முடியாது. ஆசிரியர்களின் நேரடி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் அவசியம். மாணவர் - ஆசிரியர் இடைத் தொடர்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.  மேலதிக நிபுணத்துவம், தேவைகளின் போதே நிகழ்நிலை கற்றல் செயற்பாடுகள் பொருத்தமாக இருக்கும். 


நிகழ்நிலை கல்வியானது அனைத்து பாடசாலைகளுக்கும், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காமை மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்தன. எனவே தவறவிடப்பட்ட  விடயங்களை, ஈடு செய்வதற்காக மேலதிக கால நேரம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தின் அடுப்படையில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன. 


மாணவர்களின் பாடவிதானங்களில் 75 வீதமானவை நிறைவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை மீட்டிக் கொள்ள போதுமான சந்தர்ப்பம் கோவிட் பிரச்சினையின் போதான காலத்தில் மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்றன. எஞ்சிய விடயங்களை ஈடு செய்ய மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையின் பொதுப்பரீட்சைகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. எனவே அவற்றின் தரம் தொடர்ந்து பேணப்படல் வேண்டும். பரீட்சை அமைப்புக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட மாட்டாது. சிலர் பாடத்திட்டங்களின் ,இறுதிப்பகுதிகளை தவிர்க்குமாறு வினவினர். அவ்வாறு செய்ய முடியாது. பொதுவாக இறுதிப் பகுதிகளில் இலகுவான விடயங்களே உள்ளன. எனினும் அவற்றை தவிர்த்து பரீட்சையின் அமைப்பை மாற்ற முடியாது. அது  இலவான விடயமும் அல்ல. பரீட்சையின் தரத்தை குறைக்கவும் முடியாது.


வழமையாக பரீட்சைகள் மாணவர்கள் நலன் சார்ந்ததாகவே அமுல்படுத்தப்படும். அது போன்றே இம்முறையும் மேற்கொள்ளப்படும். மேலதிக வாசிப்பு நேரமும் வழங்கப்படும். இது மாணவர்களின் பதற்றத்தை போக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.


பரீட்சைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார துறையின் அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பரீட்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். guruwaraya.lk


கோவிட் போன்ற பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும் போது. கைகட்டி பார்த்துக் கொண்டிராது நாம் எமது நடவடிக்கைகளை தொடருவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.  guruwaraya.lkதவற விடப்பட்ட காலத்தை ஈடு செய்ய மேலதிக நேரங்களை நாம் ஒதுக்க வேண்டும். 8 மணி நேரம் வேலை செய்தோம் எனின் 10 மணி வரை நாம் வேலை செய்ய முயற்சிக்க வேண்டும். guruwaraya.lk


தற்போதைய சூழ்நிலைமைகளில் பரீட்சை எக்காரணம் கொண்டும் மீள ஒத்தி வைக்கப்பட மாட்டாது.

அரசு அனைத்து பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கல் வேண்டும். GIT பரீட்சையினை முதன்முறையாக நிகழ்நிலையில் மேற்கொண்ட போது இது ஒரு பிரச்சினையாக அவதானிக்கப்பட்டது.guruwaraya.lk

பாடாசாலைகளில் மேற்கொள்ளப்படும் பாடசாலை மட்ட கணிப்பீடிகளின் தரத்தினை உறுதி செய்ய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.guruwaraya.lk


வழமையாக அழகியல் பாடங்களுக்கு பரீட்சை திணைக்களத்தினால் பிரயோக பரீட்சை நடாத்தப்படுவது வழமை. அத்துடன் பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் 5 ம் கருத்திற் கொள்ளப்படும். பரீட்சை திணைக்களத்தினால் நடைபெறும் பிரயோக பரீட்சை புள்ளிகள் , பாடசாலையினால் வழங்கப்படும் புள்ளிகள் என்பவற்றை  ஒப்பிடும் போது அவற்றுக்கிடையில் பெரிய வித்தியாசங்கள் காணப்படவில்லை. guruwaraya.lk எனவே பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் ஆள் பார்த்து போடப்படுவது என்ற கருத்து தவறானது. ஆசிரியர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றுகின்றனர்.


2020 பரீட்சையின் போது, அழகியல் பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகளுக்குப்பதிலாக பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகளை கருத்திற் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  guruwaraya.lk


5 ஆவது கணிப்பீட்டினை பரீட்சைத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், அவ்வப் பாடசாலைகளுக்குச் சென்று மேற்கொண்டு புள்ளிகள் வழங்கி அவற்றின் நம்பகத்தன்மை, சரித்தன்மை என்பவை உறுதிப்படுத்தப்பட்டு அவற்றை கருத்திற் கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது. guruwaraya.lk

மனப்பாடம் செய்து பரீட்கைள் எழுதலாம். மனனம் செய்தலே கணிப்பிடப்படுகின்றது என்ன குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட guruwaraya.lk இவ்வாறான மாற்றங்களுக்கு செல்லல் வேண்டும்.


விஞ்ஞானம், மனைப்பொருளியல். தகவல் தொழினுட்பம், சுகாதாரக் கல்வி போன்றவற்றுக்கு இலகுவாக செய்முறைப்பரீட்சைகளுக்கு செல்லலாம். இதன் மூலம் மாணவர்களின் மறைந்திருக்கும் திறன்களை வௌிக்கொணரலாம்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழினுட்பத்துறையானது பிரபல்யமடைந்து வருகின்றது. புதிதாக பல்கலைக்கழகங்களில்  தொழினுட்ப பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் காணப்படும் தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு ஏற்பவே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.guruwaraya.lk


புதிய நிர்மாணங்கள் தொடர்பாக மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். புதிய நிர்மாணங்கள் கண்டு பிடிப்பாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில், தொழினுட்ப கல்லூரிகளில், பொறியியல் துறைகளில் விசேட அனுமதி வழங்கிவது guruwaraya.lk  தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் தமக்கான துறையை தெரிவு செய்வது, பல்கலைக்கழகங்களில் உள்ள கற்றை நெறிகளுக்கு அமைய பாடத் தெரிவுகளை மேற்கொள்வது  தொடர்பாக மாணவர்கள் போதிய அறிவை பெற்றிருப்பதில்லை. ,இது தொடர்பாக அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அறிவுறுத்தப்படல் வேண்டும். guruwaraya.lk

பிரயோக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். மாணவர்களின் பிரயோக அறிவையும் அளவிடக்கூடிய முறையில் பரீட்சை கட்டமைப்புகள் மாற்றப்படல் வேண்டும். எழுத்தின் மூலமல்லாது, பிரயோக guruwaraya.lk முறை மூலம் திறமைகளை வௌிக்காட்டக்கூடிய மாணவர்கள் இனங்காணப்படல் வேண்டும். 


மொழிப் பாடங்களுக்கான பரீட்சைகளின் போது பேச்சு, வாசிப்பு, கேட்டல், கிரகித்தல் ஆகிய நான்கு துறைகளும் பரீட்சிக்கப்படல் வேண்டும்.

சிறிதாக இருப்பினும் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவை நிறுவனத்தினதும் நாட்டினதும் அபிவிருத்திக்கு முக்கியமானவையாகும்.guruwaraya.lk


நான் பரீட்சை ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் நவீன கண்டுபிடிப்புகள் தொடர்பான பத்திரிகை ஆக்கங்களை சேகரித்து வருகின்றேன். இவர்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் விசேட அனுமதி தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.guruwaraya.lk





Popular

Recent

Ad

Learning Materials for Students