அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரம் மேலதிக விடுமுறை காலம்
நாட்டின் தற்போதைய கோவிட் 19 பரவல் தொடர்பாக கல்வி அமைச்சு கடுமையான அவதானத்தை செலுத்தி வருவதுடன், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, guruwaraya.lk பெற்றொர், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மார் சந்தேகத்துடனும், பயத்துடனும் இருக்கின்றனர்.guruwaraya.lk
மாணவர்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது guruwaraya.lk அனைவரும் அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும். அது தொடர்பான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது கல்வி அமைச்சின் பொறுப்பாகும்.
அதனையொட்டி, சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தல்களின் படி, பாடசாலை கட்டமைப்பில் ஏற்படக்கூடிய guruwaraya.lk அசாதாரண நிலைகளை அவதானிக்கும் முகமாக ஒரு வாரம், அதாவது ஜூலை 13 தொடக்கம் ஜூலை 17 வரை நாட்டின் guruwaraya.lk அனைத்து பாடசாலைகளும், பிரிவெனாக்களும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
இத்தீர்மானம் அனைத்து தனியார், சர்வதேச பாடசாலைகளும் மற்றும் மேலதிக வகுப்புகளும் நடைமுறைப்படுத்தும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது.
எனினும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகள் உரிய தினத்தில் திறக்கப்பட்டு தபால் மூல வாக்களிப்புகள் நடைபெற வேண்டும், அவற்றை நடைமுறைப்படுத்துவது அதிபர்மாரின் பொறுப்பாகும்.